வழிபாடு

எட்டயபுரம் முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா

Published On 2022-10-07 07:45 GMT   |   Update On 2022-10-07 07:45 GMT
  • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
  • முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி அம்மன் கோவில் தெரு செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 28-ந் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் வரை கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணியளவில் கும்ப அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலை 5 மணி அளவில் முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News