வழிபாடு

இன்று நான்காவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

Update: 2022-09-29 07:47 GMT
  • 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
  • இன்று நான்காவது நாளுக்குரிய போற்றி பாடல்.

முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

ஓம் அகர முதல்வா போற்றி!

ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

ஓம் உமையவள் மைந்தா போற்றி!

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

ஓம் ஐங்கரனே போற்றி!

ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

ஓம் கற்பக களிறே போற்றி!

ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

இன்று நான்காவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

ஓம் கருணை வடிவே போற்றி

ஓம் கற்பகத் தருவே போற்றி

ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி

ஓம் ஊழ்விணை தீர்ப்பவளே போற்றி

ஓம் கரும்பின் சுவையே போற்றி

ஓம் கார்முகில் மழையே போற்றி

ஓம் வீரத்திருமகளே போற்றி

ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி

ஓம் பகைக்குப் பகையே போற்றி

ஓம் ஆவேசத் திருவே போற்றி

ஓம் தீமைக்குத் தீயே போற்றி

ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி

ஓம் நாரணன் தங்கையே போற்றி

ஓம் அற்புதக் கோலமே போற்றி

ஓம் ஆற்றலுள் அருளே போற்றி

ஓம் புகழின் காரணியே போற்றி

ஓம் காக்கும் கவசமே போற்றி

ஓம் ரோகிணி தேவியே போற்றி

Tags:    

Similar News