வழிபாடு

பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்த போது எடுத்த படம்.

கும்பகோணம் நாக கன்னியம்மன் கோவில் ஆனித்திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Published On 2023-07-03 05:33 GMT   |   Update On 2023-07-03 05:33 GMT
  • நாக கன்னியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • அம்மனுக்கு பாலாபிஷேம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கும்பகோணத்தில் காளியாபிள்ளை தெருவில் நாகக்கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாகக்கன்னியமனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடந்தது. முன்னதாக கும்பகோணம் பகவத் அரசாற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், வேல், காவடி, அலகுகாவடி, பால் குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தெரு மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News