வழிபாடு

நாள்தோறும் நல்லது நடக்க...

Update: 2022-10-05 08:56 GMT
  • அதிகாலையில் நல்ல தெய்வீகப் படங்களில் கண் விழிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நல்லது நடக்க வேண்டுமென்று விரும்புபவர்கள், என்ன செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதன்படி அதிகாலையில் நல்ல தெய்வீகப் படங்களில் கண் விழிக்க வேண்டும். குறிப்பாக கண் விழித்ததும் விநாயகர் மற்றும் இஷ்டதெய்வம், குல தெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.

அதன் பிறகு உள்ளங்கையைப் பார்த்து, தாய், தந்தை, பெரியோர்கள், குரு, நமக்கு வழிகாட்டியாக விளங்குபவர்களை நினைத்து வணங்க வேண்டும். இந்த மானசீகமான ஆசியினால் நமக்கு அன்றாடச் சூழ்நிலைகள் அனைத்தும் நன்றாக அமையும்.

குளித்து முடித்த பிறகு இறைவனை பூஜித்து விட்டு, குடும்பப் பெரியவர்கள், உடன் இருப்பவர்கள் மனம் நோகாமல் பேசி, அன்றைய அலுவல்களைத் தொடங்கினால் நாள் முழுவதும் நல்லதே நடக்கும். ஒவ்வொரு நாளும் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News