வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-08-30 05:50 GMT   |   Update On 2022-08-30 05:50 GMT
  • 10-ந்தேதி மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நடக்கிறது.
  • 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி திருவிழா தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றுகிறார்.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளையில் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 10-ந் தேதி மாலை 5 மணி அளவில் இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அமர செய்து நான்கு ரத வீதிகளில் உலா வரும் தேரோட்டம் நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவமும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

Tags:    

Similar News