search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avani festival"

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் நாளான நேற்று மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோசிவ் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்ந்தார். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை.
    • தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்,செப்.10-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம்திருவிழா இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்புசாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை 8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச்சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 5-ம் நாளான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    பின்னர் அதிகாலை 5 மணிக்கு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    8-ந்தேதி, குடவருவாயில் தீபாராதனை

    5-ம் நாளான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் நாளான 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகுசட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு மாலையில் சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    13-ந்தேதி, தேரோட்டம்

    8-ம் நாளான 11-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மகாகாளி அம்மன், வீரமாகாளி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவிளக்கு போடுதல், சிறப்பு அர்ச்சனை ஆகியவை நடந்தது.

    பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • புதன்கிழமை அத்தாழ பூஜை நடைபெறும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது.

    நாளை மறுநாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் மூலஸ்தானம் புற்று மண்ணால் உருவானது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இந்த ஆண்டு குடமுழுக்கிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் அம்மனுக்கு உகந்த நாளான ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை காண அதிகளவில் திரண்ட பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசனம் செய்வதற்காக பொதுவழி, சிறப்புவழி என இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இருவழிகளின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.

    கோவில் பிரகாரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தன்னார்வலர்களும் ஏராளமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதுமட்டுமின்றி முடிகாணிக்கை, மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடனை செலுத்தினர். அதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    • இன்று ஆராட்டு விழா நடக்கிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனி நடைபெற்று வந்தது.

    9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாலை 5.45 மணியளவில் கோவிலில் இருந்து தட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் அமரச் செய்தனர். பின்னர் தேரை பக்தர்கள் 4 ரத வீதிகளில் இழுத்து வந்தனர்.

    இந்திரன் தேராகிய சப்பர தேர் மிகவும் பழுதாகி காணப்பட்டதால் அதை சீரமைக்க பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் இந்திரன் தேர் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேரோட்ட விழா நிகழ்ச்சியில் முன்னாள் கண்காணிப்பாளர் சோனாசலம், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தேர் மாலை 6.25 மணியளவில் நிலைக்கு வந்து நின்றது. தொடர்ந்து சாமிக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
    • விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 10-ம் நாளான நேற்று மாலை விறகு விற்ற திருவிளையாடல் லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார். அதை தொடர்ந்து விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

    புராண வரலாறு வருமாறு: வரகுன பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவர் பாண்டியநாட்டிற்கு வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவர் அரசன் முன் யாழ் மீட்டினார். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினார். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் சவால் விட்டார். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன் அரசவை ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். இறைவனும் முதியவர் உருவம் கொண்டு விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்து கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்து கொண்டிடே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று வரலாறு கூறுகிறது.

    • லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 9-ம் நாளான நேற்று பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது. இதையொட்டி சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் காட்சி அளித்தார். பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, பழைய சொக்கநாதர் கோவில், சிம்மக்கல் வழியாக பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினார்கள்.

    அங்கு மதியம் 2.35 மணிக்கு மேல் பிட்டு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் சுவாமியாக ராஜா பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறவில்லை. எனவே நேற்று இறைவனை காணவும், அப்போது நடைபெறும் லீலையை காணவும் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி நேற்று களைகட்டி காணப்பட்டது. பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாலை சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி ஒர்க்‌ஷாப் ரோடு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக இரவு கோவிலை வந்தடைந்தனர். பிட்டு திருவிழா நடைபெறும் தினம் மதுரையில் மழை பெய்வது வழக்கம். அதே போன்று நேற்று மதியத்தில் இருந்து மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    திருவிழா நடைபெறும் வைகை ஆற்றின் கரை பகுதியில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வரலாற்று காலத்தில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவேண்டும் என்று அரசன் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் புட்டு விற்று பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி தவித்தார். அவரது நிலை அறிந்த சிவபெருமான் அந்த மூதாட்டி முன்பு தோன்றி, உங்களுக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக சாப்பிட புட்டு தருமாறு கேட்டு மண் சுமந்தது சிவனின் திருவிளையாடலில் ஒன்றாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த சம்பவத்தை சித்தரித்து காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது. அதன்படி ஆவணி மாத மூல நட்சத்திரமான நேற்று காலை, காரைக்கால் கயிலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ×