வழிபாடு

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா

Published On 2022-08-10 07:06 GMT   |   Update On 2022-08-10 07:06 GMT
  • படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது.
  • நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கும் மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கும் சந்தன காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9.45 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம் எடுத்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தணமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்கு சந்தணமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கொடை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் நடராஜன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தனசேகரன், துணை செயலாளர் சுந்தரேசன், கணக்காளர் பிரபு, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செல்வ முருகன், செந்தில் ஆறுமுகம், அமிர்த குண விநாயகம், ராஜேஷ் கண்ணன், கணேசன், சுரேஷ், விக்னேஷ், அஜெய், சுபாஷ் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News