வழிபாடு

களக்காடு நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

Published On 2023-07-01 03:52 GMT   |   Update On 2023-07-01 03:52 GMT
  • 7-ந்தேதி பரிவேட்டை நடக்கிறது.
  • 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News