வழிபாடு
ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Update: 2022-05-21 05:36 GMT
இன்று (சனிக்கிழமை) குருஞானசம்பந்தரின் குருவான ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் கோவில் திருவிழா, ஆதீனகுரு முதல்வர் குருபூஜை விழா, ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேச விழா ஆகிய விழாக்கள் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் ஞானாம்பிகையுடன் ஞானபுரீஸ்வரர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். காலை தொடங்கிய தேரோட்டம் மதியம் 2 மணி அளவில் நிலையை அடைந்தது.

இதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு 9-ம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை குருஞானசம்பந்தரின் குருவான ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் நடைபெறுகிறது. பின்னர், சொக்கநாதர் வழிபாடு, ஞானசம்பந்தருக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு ஆதீன கர்த்தர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
Tags:    

Similar News