வழிபாடு
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Update: 2022-03-24 08:49 GMT
திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பனந்தாள் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி, திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வடுகபைரவர், பால சனீஸ்வரர், சித்திரகுப்தர் சன்னதிகள் அமைந்துள்ள சிவத்தலமாகும். இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகளுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் சிம்சன் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உற்சவத்தின் 10 நாட்களும் சிறப்பு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. வருகிற 13-ந்தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 15-ந்தேதி தேரோட்டமும், 16-ந்தேதி புஷ்கரணியில் சித்திரை தீர்த்தவாரியும் நடக்கிறது. விழா நாட்களில் வேத, தேவார பாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோடிக்காவல், அம்மாப்பேட்டை கிராமமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News