வழிபாடு
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை

Update: 2022-03-22 05:32 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து சிங்காரி மேளத்துடன் யானை மீது சந்தன குடம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சாந்திகிரி ஆசிரமம் சுவாமி பாசுரா ஞானதபஸ்வி தொடங்கி வைத்தார்.
நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் காலையில் அபிஷேகம், மலர் நிவேத்தியம், கணபதி ஹோமம் போன்றவை நடந்தது. தொடர்ந்து, அம்மச்சியார் பொட்டல் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது மேளத் தாளத்துடன் கொடி கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின்னர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து சிங்காரி மேளத்துடன் யானை மீது சந்தன குடம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சாந்திகிரி ஆசிரமம் சுவாமி பாசுரா ஞானதபஸ்வி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் ரத்தினசுவாமி, தென்குமரி கல்வி கழக தலைவர் காமராஜ், செயலாளர் வெற்றிவேல், நடுவூர்க்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் பாரத், பருத்திவிளை இந்து சமய பேரவை திருக்கோவில் செயலாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் 3008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் முதல் விளக்கை கருமன்கூடல் சரஸ்வதி கல்யாணசுந்தரம் ஏற்றி வைத்தார். நெட்டாங்கோடு சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி விளக்கு பூஜையை நடத்தினார்.

விழாவில் நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News