ஆன்மிகம்
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா

வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா

Published On 2021-04-06 04:40 GMT   |   Update On 2021-04-06 04:40 GMT
வாசுதேவநல்லூர் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மி அடித்தனர்.
வாசுதேவநல்லூர் காமராஜர் தெருவில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

விழா நாட்களில் கரகம் எடுத்தல், கோவில் முன்பு தினமும் பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பங்குனி பொங்கல் விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மி அடித்தனர்.

இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News