சபரிமலை செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் இருமுடி செலுத்துவதற்கு வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு
பதிவு: நவம்பர் 26, 2020 13:16
ஐயப்ப பக்தர்கள்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாநில தலைவர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல மகர விளக்கு விழா காலங்களில் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், ஸ்டெச்சர் சர்வீஸ், புண்ணிய பூங்காவனம் சேவைகளும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அமைப்புகள் வேண்டுகோளின்படி சபரிமலை யாத்திரை செல்ல முடியாதவர்கள் இருமுடி செலுத்துவதற்கு வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழுவாக வருபவர்கள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய, மாநில மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :