கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் முகக்கவசங்கள் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதித்தனர்.
இதேபோல ஆரணி-ஆரணிபாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசங்கள் அணிந்து சாமியை தரிசனம் செய்தனர்.
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், சேவூர் ஊராட்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முருகர் கோவில்களில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.