ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேசுவரம்- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இன்று திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2020-09-01 09:40 GMT   |   Update On 2020-09-01 09:40 GMT
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் காலையில் குறைந்த அளவு பக்தர்களே வருகை தந்தனர்.
தமிழகத்தில் இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.

தென்னகத்து காசி என்ற ழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பக்தர் கள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்பட்டனர்.

காலையில் திரண்ட உள்ளூர் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் கை கழுவ சானி டைசர் வழங்கப்பட்டது. பின்னர் உடல்வெப்ப நிலை சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலில் உள்ள 22 கிணறுகளில் புனித நீரா தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க அனுமதிக் கப்பட்டனர். அங்கு பக்தர்கள் புனித நீராடி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், உத்தர கோசமங்கை மங்கள நாதர் கோவில், ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவில், ராமநாதபுரம் வழிவிடு முருகன்கோவில், சிவன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் இன்று திறக்கப்பட்டது. காலையில் குறைந்த அளவு பக்தர்களே வருகை தந்தனர்.

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் இன்று காலை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந் தனர்.

மக்கள் வருகையை கட்டுப் படுத்தும் விதத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் போடப் பட்டுள்ளது. திருக் கோவி லுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். பக்தர்கள் உடல் வெப்பநிலை அறியும் பரி சோதனைக்கு செய்யப் பட்டது.

கோவில் வாசலில் வைக் கப்பட்டிருக்கும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர். கோவில் பூசாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந் திருந்தனர் விபூதி குங்குமம் பிரசாதங்கள் கைகளில் வழங்கப்படவில்லை அருகில் தட்டில் வைக்கப்பட்டிருந்து. பக்தர்கள் தாங்களே எடுத்துக் கொண்டனர்.

பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யும் போது உரிய சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர் இருக்கன்குடி திருக்கோவில் நிர்வாக ஆணையர் கருணாகரன் பரம்பரை அறங்காவலர் குழு உறுப் பினர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி போலீசாரர் கோயில் ஊழியர்கள் ஆ கியோர் இருந்தனர்.

விருதுநகர் சொக்க நாதர் கோவில், திருச்சுழி திருமேனிநாதர் கோவில் களிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் இன்று பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. காலையில் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்று வட்டார பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோவில், காளை யார் கோவில், தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், மடப்பரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News