ஆன்மிகம்
சிவலிங்கம் வழிபாடு

தெய்வீகச் சாரல்

Published On 2020-04-10 03:56 GMT   |   Update On 2020-04-10 03:56 GMT
ஆன்மீகம் சார்ந்த சில முக்கியமாக, அரிய தகவல்களை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மணல் கொண்டு செய்யப்பட்ட சிவலிங்கத்தை ‘கைகதலி லிங்கம்’ என்று அழைப்பார்கள்.

உளியால் செதுக்கப்படாமல், தானாகவே உருவான லிங்கத்தை ‘விடங்கன்’ என்று கூறுவார்கள்.

கோவில்களில் கிடைக்கும் கட்டி சாதம், ‘வில்லை சாதம்’ என்று அழைக்கப்படும்.

திருநீறுக்கு ‘வெண்ணீறு’, ‘வெண்பலி’ என்ற பெயர்களும் உண்டு.

திருமஞ்சன காலத்தில் கோவில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை, ‘ஜலபத்திரம்’ எனப்படும்.

தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் ‘ஸ்ரீபீடம்’ என்று அழைக்கப்படும்.

கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்வது ‘தைலதாரை’ எனப்படும்.

பழம், நெய், சர்க்கரை முதலியவற்றை சேர்த்து செய்யப்படும் நைவேத்தியம் ‘திருமதுரம்’ எனப்படும்.
Tags:    

Similar News