ஆன்மிக களஞ்சியம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் என்பதற்கேற்ப விளங்கும் தோரணமலை

Published On 2024-05-10 10:31 GMT   |   Update On 2024-05-10 10:31 GMT
  • முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
  • அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது.

குன்று இருக்கும் இடங்கள் எல்லாம் குமரன் அருள் வீசும் இடங்கள்.

முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள "தோரணமலை" முழுக்க முழுக்க வித்தியாசமானது.

மிகுந்த தனித்துவம் கொண்டது.

முதலில் தோரணமலை எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது.

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது.

நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும்.


Tags:    

Similar News