ஆன்மிகம்
அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி

அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி

Published On 2020-01-01 06:51 GMT   |   Update On 2020-01-01 06:51 GMT
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இறைவன் ஒளிமயமானவன் என்பதால் பெரிய உருவில் எளிதாய் வழிபட லிங்க வடிவில் பல்வேறு கோணங்களில் பக்தர்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாக 12 முக்கிய லிங்கங்களை பக்தர்கள் தரிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது, சோமநாத், விஷ்வநாத், திரியம்பகேஷவ்ரர், ஓங்காரேஷ்வர், மகாகாலேஷ்வரர், நாகேஷ்வர், வைத்யநாத், கிருஷ்ணேஷ்வர், பீமா சங்கர், கேதார்நாத், மல்லிகார்ஜுன், ராமேஷ்வர் ஆகிய லிங்கவடிவத்தை இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 5-ந்தேதி வரை இந்த தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடக்கநாள் விழாவில், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகிகள் பீனாஜி, கலாவதிஜி, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், என்.ஆர்.தனபாலன், முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. ப.தன்சிங், முன்னாள் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News