ஆன்மிகம்
முடவன் முழுக்கு பெயர் காரணம்

முடவன் முழுக்கு பெயர் காரணம்

Published On 2019-11-16 08:18 GMT   |   Update On 2019-11-16 08:18 GMT
கடைமுழுக்கு நாளிலும் காவிரியில் நீராட முடியாதவர்கள், கார்த்திகை மாத முதல்நாளில் சூரிய உதயத்திற்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும்.
கடைமுழுக்கு நாளிலும் காவிரியில் நீராட முடியாதவர்கள், கார்த்திகை மாத முதல்நாளில் சூரிய உதயத்திற்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும். ஒருமுறை துலா நீராடலின் மகத்துவத்தை அறிந்து, தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். ஐப்பசி மாதம் முடிவதற்குள் காவிரியின் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி அம்மையப்பனை வழிபடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவன், இங்கு வந்து சேர்ந்தபோது ஐப்பசி மாதம் முடிந்திருந்தது. அன்றைய தினம் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது.

துலாக்கட்டத்திரி நீராட இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டுமே என்றும், தன் இயலாமையை நினைத்தும் வருந்திய அவன், மயூரநாதரிடம் முறையிட்டான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன்,அவனுக்காக ஒருநாள் நீட்டிப்பு தந்து “ஐப்பசி மாதத்தில் துலா நீராடிய பெரும்பலனை, கார்த்திகை முதல் நாளிலும் பெறலாம்”என்று அருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவன், ‘சிவாயநம’ என்று பஞ்சாட்சரம் உச்சரித்து காவிரியில் மூழ்கி எழுந்தான். ஆம்! அவனது பாவமும், முன்ஜென்ம வினையும், முடமும் நீங்கியது. அதுநாள் முதல் கார்த்திகை முதல் நாளிலும் இங்கு நீராடுவது ஐதீகமாகி விட்டது. அன்றைய தினம் நீராடுவதற்கு ‘முடவன் முழுக்கு’ என்று பெயர்.
Tags:    

Similar News