ஆன்மிகம்
ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் உறியடி திருவிழா இன்று நடக்கிறது

Published On 2019-08-24 04:47 GMT   |   Update On 2019-08-24 04:47 GMT
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று உறியடி திருவிழா நடக்கிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ராஜகோபால சுவாமிக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு, ருக்மணி, சத்யபாமாவுடன் வீதி உலா சென் றார். பின்னர் மாலையில் சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது.

இதையடுத்து கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ சாற்றுமுறை நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவந்திபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு கோவில் அருகே உறியடி திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News