ஆன்மிகம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் பிரமாண்ட யாகசாலை

Published On 2019-06-14 04:03 GMT   |   Update On 2019-06-14 04:03 GMT
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி பூஜைகள் தொடங்குகின்றன.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் பிரசித்திபெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2007-ம் ஆண்டு 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி ஆகும்.

அந்தவகையில் தற்போது ஆஞ்சநேயர்-விநாயகர் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதிகளில் உள்ள விமானங்கள் மற்றும் 5 நிலை ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி வரும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக அங்கு 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்படுகின்றன. 22-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ‘தச தரிசன பூஜை’ அதாவது பசு யானை நாட்டியக் குதிரைகள் பச்சைக்கிளி நிலைக்கண்ணாடி கன்னிகை சுமங்கலி சன்னியாசி வேதவிற்பன்னர்கள் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

23-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது. பட்டாசாரியார்கள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கு கிறார்கள். அன்று சுமார் 5 லட்சம் பேருக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு தேவி பூதேவி சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது.
Tags:    

Similar News