ஆன்மிகம்

சேலத்தில் சாய் பாபாவின் பாதுகை தரிசனம்

Published On 2019-06-11 04:46 GMT   |   Update On 2019-06-11 04:46 GMT
பாபா பயன்படுத்திய பாதுகையை சேலத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி பாதுகைக்கு சிறப்பு பூஜைகளும், விளக்குபூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணமும் நடைபெற்றது.
மராட்டிய மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது. அங்கு சாய்பாபா பயன்படுத்திய பாதுகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாபா பயன்படுத்திய பாதுகையை சேலத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஷீரடி சாய் நண்பர்கள் குழு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சேலம் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் சாய் பாபாவின் பாதுகை தரிசனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி பாதுகைக்கு சிறப்பு பூஜைகளும், விளக்குபூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணமும் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் சிலர் பஜனை பாடல்களை பாடினர். காலை முதல் இரவு வரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாய் பாபாவின் பாதுகையை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவில் பாதுகைக்கு சிறப்பு ஆரத்தியும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News