ஆன்மிகம்

வீரக்காரன் சாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2019-03-16 03:10 GMT   |   Update On 2019-03-16 03:10 GMT
மேச்சேரி அருகே உள்ள பானாபுரம் கிராமத்தில் குதிரைக்காரனூர் சின்னூர்காட்டு வளவில் வீரக்காரன் சாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மேச்சேரி அருகே உள்ள பானாபுரம் கிராமத்தில் குதிரைக்காரனூர் சின்னூர்காட்டு வளவில் வீரக்காரன் சாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஸ்ரீவீரக்காரன், கருப்பசாமி, கன்னிமார், விநாயகர், பழனியாண்டவர், அம்சார் புடவைக்காரி உள்பட 34 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி திருப்பள்ளி எழுச்சி, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, மற்றும் 4-ம் கால யாகபூஜை, காயத்திரி மந்திரம், ஹோமங்கள் ஆகியவை நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை மேச்சேரி தனபால் அய்யர், ராசிபுரம் ஹரிஅய்யர் குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவில் கோவில் பங்காளிகள், உறவினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் அண்ணாமலை, மூர்த்தி, முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News