ஆன்மிகம்

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆனந்தவல்லி சோமநாத சுவாமி

Published On 2019-02-10 08:01 GMT   |   Update On 2019-02-10 08:01 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சோமநாதர் திருக்கோவில் சிவனின் அம்சமாக கருதப்படும் வில்வகாடாக இருந்ததை காண முடிகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சோமநாதர் திருக்கோவில் சிவனின் அம்சமாக கருதப்படும் வில்வகாடாக இருந்ததை காண முடிகிறது.

இக்கோவில் முழுவதும் வில்வமே ஸ்தல விருட்ச மரமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் அதிக அளவில் வில்வமரங்களை இன்னும் காண முடிகிறது.

சிவனே சோமநாதராக அருள்பாலிக்கும் வில்வவன ஷேத்திரமாக இப்போதும் உள்ளது. சந்திரன் 48 நாட்கள் தங்கி சோமநாதர் ஆனந்தவல்லியை வணங்கி சுகம்அடைந்ததால் கிருதயுகத்தில் சந்திரபட்டணம் எனவும் திரே தாயுகத்தில் வாரை வீர மதுரை மற்றும் வில்வவனம் வானரபுரம் என பல பெயர்கள் இருந்து தற்போது வானர்கள் போற்றும் மானாமதுரையாக உள்ளது.

இங்கு உள்ள சோமநாதர் பால் வெண்மை நிறத்தில் அருள்பாலிக்கிறார். ஆனந்தவல்லியை வணங்கி பலர் வாழவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால் அற்புதங்கள் தரும் ஆனந்த வல்லியாக மானாமதுரை மக்களுக்கு அருள் ஆசி வழங்கி வருவது தனிச்சிறப்பாக உள்ளது.

சந்திரன் சாபம் நீங்க புஷ்கரணி தீர்த்தம் உருவாக்கப்பட்டு கோவில் முன்பு கிணறு வடிவில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News