ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் தசரா விழா தோன்றியது எப்படி?

Published On 2018-10-16 05:42 GMT   |   Update On 2018-10-16 05:42 GMT
நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் தவலிமை மிக்கவராக இருந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமதியாதையும் செய்தார்.

மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக குலசேகரன் பட்டினத் தில் எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினார். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார்.

மகிசாசுரனின் இடையுறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News