ஆன்மிகம்

புஷ்கர விழாவின் போது என்ன தானம் செய்யலாம்?

Published On 2018-10-01 09:41 GMT   |   Update On 2018-10-01 09:41 GMT
தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.



pushkaram, worship, pushkaram thamirabarani, guru peyarchi, புஷ்கரம், வழிபாடு, குருப்பெயர்ச்சி





தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.

அதன்படி விழா தொடங்கும் முதல் நாள் தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 2-ம் நாள் வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 3-ம் நாள் வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி, 4-ம் நாள் நெய், எண்ணெய், தேன், பால். 5-ம் நாள் எருமை, காளை. 6-ம் நாள் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 7-ம் நாள் வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 8-ம் நாள் சந்தனக்கட்டை, பூக்கள். 9-ம் நாள் மஞ்சள். 10-ம் நாள் புத்தக தானம். 11-ம் நாள் யானை, குதிரை. 12-ம் நாள் எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

காவிரியில் அந்திம புஷ்கர விழா

புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் வாசம் செய்கிறார். குருபெயர்ச்சி ஆரம்பித்து முதல் 12 நாட்கள் ஆதிபுஷ்கரம் என்றும், அடுத்த குருபெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் ஆதிபுஷ்கரமானது 12-9-2017 முதல் 24-9-2017 வரை 12 நாட்கள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கொண்டாடப்பட்டது.

அந்திம புஷ்கர விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-10-2018 வரை 12 நாட்கள் காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியில் அந்திம புஷ்கர விழா 8-10-2018, 9-10-2018 ஆகிய தேதிகளில் வேதபாராயணத்துடன், சிறப்பு பூஜையுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News