ஆன்மிகம்

குலதெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதை தரும் விளக்கம்

Published On 2018-05-11 10:05 GMT   |   Update On 2018-05-11 10:05 GMT
இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
குலதெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News