ஆன்மிகம்
சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த மத்தியபுரி அம்மன், சுவாமியை படத்தில் காணலாம்.

இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

Published On 2018-02-21 03:21 GMT   |   Update On 2018-02-21 03:21 GMT
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை இம்மையிலும், நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் மாலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.

நேற்று காலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இன்று (புதன் கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினமும் சுவாமி வீதிஉலா வருகிறார். 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் பிஷாடணர் புறப்பாடு நடக்கிறது.


கோவில் பட்டர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பித்ததை படத்தில் காணலாம்.

27-ந்தேதி மாலை 3 மணிக்கு செவ்வாய் பிரதோஷம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு நடைபெற்று இரவு 8 மணிக்கு 4 மாசி வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி 10-ம் உற்சவ தினத்தில் காலையில் தீர்த்தவாரி, இரவு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நடைபெறுகிறது. 2-ந்தேதி உற்சவ சாந்தியும், பைரவர் பூஜையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News