ஆன்மிகம்

அபூர்வ நர்த்தன விநாயகரின் தோற்றம்

Published On 2018-01-04 07:12 GMT   |   Update On 2018-01-04 07:12 GMT
விநாயகப் பெருமான் நர்த்தனக் கோலத்தில் இருப்பது (நடனம் ஆடுவது) போன்ற காட்சிகளை ஆலயங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்று.
விநாயகப் பெருமான் நர்த்தனக் கோலத்தில் இருப்பது (நடனம் ஆடுவது) போன்ற காட்சிகளை ஆலயங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்று. ஆனால் இந்த அபூர்வ நர்த்தன விநாயகரின் தோற்றத்தை திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயத்தில் காணலாம். 

எல்லா ஆலயங்களிலும் விநாயகப் பெருமானின் சன்னிதி முன்பாக, அவரது வாகனமான மூஞ்சுறு எலியின் உருவம் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த சன்னிதியில் விநாயகருக்கு முன்பாக மூஞ்சுறு வாகனம் இல்லை. 

அதற்குப்பதிலாக விநாயகப் பெருமான், தனது வாகனமான மூஞ்சுறு வாகனத்தின் மீது நின்று நர்த்தனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு விசேஷமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News