ஆன்மிகம்

சனி கதிர் பாயும் திருநள்ளாறு

Published On 2017-11-26 05:34 GMT   |   Update On 2017-11-26 05:34 GMT
பூமியில் எத்தனையோ இடங்களில் சனீஸ்வரனுக்கு ஆலயங்கள் இருக்க, திருநள்ளாறு மட்டும் விசேஷமாக திகழ்வதற்கு என்ன காரணம்? என்று பார்க்கலாம்.

பூமியில் எத்தனையோ இடங்களில் சனீஸ்வரனுக்கு ஆலயங்கள் இருக்க, திருநள்ளாறு மட்டும் விசேஷமாக திகழ்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதே போன்று சனி கிரகத்தின் நீள் வட்டப் பாதையின் உச்சமான கதிர்வீச்சு, திருநள்ளாறில் அதிகமாக இருக்கிறது.

இதனை நமது முன்னோர் அறிந்து சனீஸ்வரனுக்கு இங்கே ஆலயத்தை அமைத்து வழிபட்டனர். சனி கிரகமானது திருநள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது கதிர்களை வாரி இறைக்கிறது.

இந்தக் கதிர்வீச்சு நம் உடலில் பட்டால், பல நன்மைகளை நாம் பெறுவோம். இக்கோவிலுக்கு வருபவர்கள் ஆற்றில் தலை முழுகி, ஒருநாள் தங்கியிருந்து ஈஸ்வரனை வழிபட்டால், சனி கிரகத்தின் கதிர்வீச்சின் பலனை முழுமையாக அடையலாம்.
Tags:    

Similar News