search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனீஸ்வரன்"

    • சனீஸ்வரன், ஜேஷ்டாதேவி ஆகியோரின் புதல்வன் குளிகன்.
    • குளிகனின் பிறப்பே நல்ல நிகழ்ச்சிகளை தொடங்குவதற்காக உருவானது.

    குளிகன் என்னும் மாந்தன், சனீஸ்வரன், ஜேஷ்டாதேவி ஆகியோரின் புதல்வன் ஆவார். குளிகனின் பிறப்பே நல்ல நிகழ்ச்சிகளை தொடங்குவதற்காக உருவானது.

    முந்தைய காலத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்தாள். இந்த நிலையில் ராவணன் தன்னுடைய குலகுருவான சுக்ராச்சாரியாரை சந்தித்தார். யாராளும் வெல்ல முடியாத அழகும், அறிவும் கொண்ட மகன் தான் தனக்கு பிறக்க வேண்டும் எனவே அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் ராவணன்.

    அதற்கு சுக்லாச்சாரியார் கிரகங்கள் அனைத்து ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்கு பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை நீ விரும்பியபடி எல்லா சிறப்புகளை கொண்டதாக இருக்கும் என்று கூறினார். அவ்வளவு தான் உடனே ராவணன் நவகிரகங்களை சிறைபிடித்து ஒரே சிறையில் அடைத்தான்.

    ஒரே அறையில் இருந்த கிரகங்கள் அனைவரும் திகைத்து நின்றனர். நவக்கிரகங்களும் ஒரே அறையில் இருப்பதால் நடக்கப்போகும் இன்னல்களை எண்ணி கவலை கொண்டனர். அதேநேரத்தில் மண்டோதரியும் குழந்தை பிறக்க முடியாமல் பெரும் தவிப்பில் இருந்தாள்.

    இந்த செய்தியை கேட்ட நவகிரகங்கள் அவர்களால் தான் ராவணனின் மனைவிக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகிறதோ? இதனால் ராவணன் தன்னை தண்டிப்பானோ என்று ஒருவித அச்சடனேயே இருந்தனர் நவக்கிரகங்கள். இதற்காக சுக்லாச்சாரியாரிடம் யோசனையும் கேட்டனர்.

    இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் உங்கள் ஒன்பது பேரை தவிர நல்ல செயல் செய்வதற்காக இன்னொரு புதியவரை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றி கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அதோடு அதேவேளையில் மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம் என்று சுக்லாச்சாரியார் ஆலோசனை கூறினார்.

    அதன்படியே சனீஸ்வரர் தன்னுடைய சக்தியினால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். அந்த நேரத்தில் சனீஸ்வரனுக்கும், ஜேஷ்டாதேவிக்கும் பிறந்த மகன் தான் இந்த குளிகன். குளிகன் பிறந்த அந்த நேரத்தில் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகநாதன் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

    அவன் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்த குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். அவன் பிறந்த அந்த நேரத்தை குளிகை நேரம் என்று தினமும் பகலிலும்-இரவிலும் ஒருமணிநேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம் காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதிக்கப்பட்டது.

    இதனால் தான் இந்த நேரத்தில் செய்யும் எந்த செயலும் தொடர்ந்து நடைபெற்று அந்த குடும்பமே செழிக்கும் என்று சொல்லப்படுகிறது. குளிர்விக்கும் தன்மை கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களை தொடங்குவதற்காக உருவாக்கப்பட்டார்.

    குளிகனை சனிக்கிழமை தினத்தின் மாலை வேளையில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும் போது மனதி குளிகனை நினைத்தும் வணங்கல்லாம். குளிகனை வணங்கும் போது கும்குளிகாய நம என்னும் மந்திரத்தை சொல்லி வணங்கும் போது நல்லது நடக்கும். குளிகனுக்கு மாந்தி என்கிற தங்கையும் இருக்கிறார்.

    எனவே நல்ல காரியங்களை குளிகை காலத்தில் செய்தால் தொடர்ந்து நல்லது இல்லத்தில் நடைபெறும் என்பது ஐதீகம்.

    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம்  சுற்று வட்டார பகுதிகளில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு,மகாயாக பூஜை, சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடுகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் நடத்திவைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல பல்லடம் தண்டபாணி கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    ×