ஆன்மிகம்

ஜாதக நோட்டில் தெய்வப்படங்கள்

Published On 2017-11-14 04:09 GMT   |   Update On 2017-11-14 04:10 GMT
ஒவ்வொரு முறை ஜாதகத்தை புரட்டுகிற பொழுதும் தெய்வங்களின் படங்கள் நம் பார்வையில் பதிவதால், அந்த தெய்வத்தின் பொறுப்பிலேயே நமது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும்.
ஜாதக நோட்டின் அட்டையில் பல மாதிரிப் படங்கள் இருக்கும். செடிகள், கொடிகள், விலங்குகள், பொம்மைகள், உருவங்கள், விளையாட்டுக் கருவிகளின் படங்கள் என்று பல வண்ண படங்கள் இருக்கும்.

நம்முடைய ஜாதகங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களாகும். ஜோதிடக்கலை என்பது ஒரு புனிதமான கலை. அதை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்ற ஜாதகங்கள், ஒரு நோட்டில் எழுதப்படுகின்றன.

அவ்வாறு எழுதுகிற நோட்டில் தெய்வப்படங்கள் இடம்பெற்றிருந்தால் தெய்வாம்சம் எப்பொழுதும் நமக்குக் கிடைக்கும். விலங்கு களின் படங்கள் இருந்தால் போராட்டக் குணங்கள் வந்து சேரும்.

ஒவ்வொரு முறை ஜாதகத்தை புரட்டுகிற பொழுதும் தெய்வங்களின் படங்கள் நம் பார்வையில் பதிவதால், அந்த தெய்வத்தின் பொறுப்பிலேயே நமது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். எனவே மனிதனும், புனிதனாக நல்ல படங்களைத் தேர்ந் தெடுத்துக் கொள்வது நல்லது.

Tags:    

Similar News