ஆன்மிகம்

கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மகிஷா சூரசம்ஹார விழா 30-ந்தேதி நடக்கிறது

Published On 2017-09-28 06:15 GMT   |   Update On 2017-09-28 06:15 GMT
தோவாளை கிருஷ்ணன்புதூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் மகிஷா சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
தோவாளை, கிருஷ்ணன்புதூர், வெள்ளாளர் சமுதாய முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா மற்றும் மகிஷா சூரசம்ஹார விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முதல் நாளில் காப்பு கட்டுதல், கொலு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடந்தன.

தொடர்ந்து விழா நாட்களில் கொலுபூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், 2 மணிக்கு சிங்காரி மேளம், தப்பட்டை, பிற்பகல் 3.30 மணிக்கு தோவாளை ஊர் சமுதாய தலைவர்களை கவுரவித்தல் ஆகியவை நடக்கிறது.

மாலை 4 மணிக்கு முத்தாரம்மன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், 6 மணிக்கு திருமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மகிஷா சூரசம்ஹாரமும், தொடர்ந்து வாணவேடிக்கை, அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்பாள் ரதவீதி உலா வருதல், 7.40 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தோவாளை கிருஷ்ணன்புதூர், மகிஷாசூரசம்ஹார விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News