ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2017-09-23 03:18 GMT   |   Update On 2017-09-23 03:18 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து வெள்ளி கேடயத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஆதிமாரியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி விஜயதசமி அன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பாடாகி, இனாம் சமயபுரத்தில் உள்ள அய்யாளம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வன்னிமரம் சென்றடைகிறார். அன்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News