ஆன்மிகம்

சக்தி கரகம் என்றால் என்ன?

Published On 2017-09-01 09:28 GMT   |   Update On 2017-09-01 10:06 GMT
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது.

அங்காள பரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.

பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காள பரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்துபிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.

சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

Tags:    

Similar News