ஆன்மிகம்

பச்சனம்பட்டி கோலுகாரனூர் செங்காளியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2017-08-11 04:14 GMT   |   Update On 2017-08-11 04:14 GMT
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி கோலுகாரனூர் செங்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி கோலுகாரனூரில் செங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம், எருமை கிடா வெட்டுதல், தீமிதி விழா மற்றும் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து பூங்கரகம், அக்னிகரகம், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

அன்று இரவு 7 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மஞ்சள் நீர் மெரமனையும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நையாண்டி கரகம், குறவன் குறத்தி நடனம் மற்றும் வாண வேடிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் இளங்கோவன், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News