ஆன்மிகம்

நந்தியின் வாயில் இருந்து வரும் தண்ணீர்

Published On 2017-07-19 08:13 GMT   |   Update On 2017-07-19 08:13 GMT
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பழமையான கோவிலில் உள்ள நந்தியின் வாயில் இருந்து வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது. இது குறித்த விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் ராமகிரி என்ற இடம் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே பழமையான கோவில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர்.

கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தம் உண்டு. நந்தி சிலையின் வாயில் இருந்து இந்த நீர் கொட்டுகிறது. நந்தியின் வாயில் இருந்து வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதுதான் யாருக்கும் புலப்படாத ஒன்று. தண்ணீரின் சுவையும் அருமையாக இருக்கும்.
Tags:    

Similar News