ஆன்மிகம்

திருப்பதியில் கருட சேவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

Published On 2017-06-22 04:21 GMT   |   Update On 2017-06-22 04:21 GMT
திருப்பதியில் வெங்கடாஜலபதி தன்னுடைய வாகனமாக கருடனை தேர்ந்தெடுத்ததால் பிரம்மோற்சவத்தின் கருட வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வேதங்களின் கடவுளாக விளங்குபவர் விஷ்ணு பகவான். பறவைகளின் அரசனாகவும், வேதங்களின் பிரதிநிதியாகவும் மட்டுமல்லாது மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாகவும் இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் கூறுகின்றன.

திருப்பதியில் வெங்கடாஜலபதி தன்னுடைய வாகனமாக கருடனை தேர்ந்தெடுத்ததால் பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களை விட கருட வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.



கருட சேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி, மகர கண்டி போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள்.

இதனால் கருட சேவையின் போது ஏழு மலையானையும், கருடனையும் சேர்த்து வணங்குவதால் நினைத்தது நடக்கும் என்று கருதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடுகிறார்கள்.
Tags:    

Similar News