ஆன்மிகம்

அறம் வளர்த்த காமாட்சி அம்மன்

Published On 2017-06-17 08:59 GMT   |   Update On 2017-06-17 08:59 GMT
காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காமாட்சி தேவி, 32 தருமங்களைச் செய்ததால் இந்த அம்மனுக்கு ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரும் உண்டு.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காமாட்சி தேவி, 32 தருமங்களைச் செய்ததால் இந்த அம்மனுக்கு ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரும் உண்டு.

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவியான காமாட்சி அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அன்னை கொலு வீற்றிருக்கும் மூலஸ்தானத்திற்கு ‘காயத்ரி மண்டபம்’ என்று பெயர்.

இந்த மண்டபத்தில் 24 தூண்கள் உள்ளது. இந்த தூண்கள் காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களைக் குறிக்கின்றன. இந்த ஆலயத்தில் காமாட்சி தேவி, 32 தருமங்களைச் செய்ததால் இந்த அம்மனுக்கு ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரும் உண்டு.
Tags:    

Similar News