ஆன்மிகம்

பாடலீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி எல்லைக்கட்டும் நிகழ்ச்சி

Published On 2017-05-25 05:18 GMT   |   Update On 2017-05-25 05:18 GMT
நடுநாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழாயொட்டி நேற்று இரவு பிடாரி அம்மன் எல்லைக்கட்டும் உற்சவம் நடைபெற்றது.
நடுநாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி நேற்று இரவு மார்க்கெட்காலனி சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பிடாரி அம்மன் எல்லைக்கட்டும் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக தேரடிதெரு, சன்னதிதெரு சந்திப்பில் வண்ணாரமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி கிடாவெட்டி பலிகொடுக்கப்பட்டது.

பின்னர் பக்தர்கள் தீப்பந்தங்களை கைகளில் ஏந்தியபடி இல்லி லீயோ..., இல்லி லீயோ... என கோஷம் எழுப்பியபடி லாரன்ஸ்சாலை, வண்டிப்பாளையம் சாலை, திருவந்திபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளில் குறிப்பிட்ட தூரம் சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News