ஆன்மிகம்

சிவபெருமானுக்கு இலந்தை பழம் நைவேத்தியம்

Published On 2017-05-19 09:02 GMT   |   Update On 2017-05-19 09:02 GMT
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலின் தல விருட்சமான இலந்தை மரத்தில் இருந்து கிடைக்கும் பழங்கள் தான், சங்கமேஸ்வரருக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம் ஆகும். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது தல விருட்ச மான இலந்தை மரம் உள்ளது. இங்குதான் குபேரனுக்கு, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

இந்த மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்காக சுவைமிக்க பழங்களைத் தந்து கொண்டிருக்கிறது. ஆம்! இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பழங்கள்தான், சங்கமேஸ்வரருக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News