ஆன்மிகம்

தில்லையாடி கால பைரவ விநாயகர்

Published On 2017-05-07 06:40 GMT   |   Update On 2017-05-07 06:40 GMT
தில்லையாடி ஆலயத்தின் கருவறையில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கியும், கால பைரவர் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் தடத்தில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.

சில இடங்களில் வடகிழக்கில் மேற்கு நோக்கிய தனி சந்நிதி கொண்டும் சில இடங்களில் தனி ஆலயங்களிலும் காணப்படும் பைரவ வடிவம் ஒரு விநாயகர் ஆலயத்தில் வழிபடப்படுவது அபூர்வ தரிசனம் என்று கூறுவர். இந்தத் தில்லையில் அத்தகைய கால பைரவரை விநாயக தரிசனம் சிறப்பானதாகக் காணப்படுகிறது.

இவ்வாலயத்தில் மூலவர் விநாயகர், பைரவருடன் ஒரே கருவறையில் எழுந்திருப்பதால் ஸ்ரீ பைரவ விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கியும், கால பைரவர் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Tags:    

Similar News