ஆன்மிகம்
திருக்கோட்டி அய்யனார் கோவிலில், கோவில் யானை கோமதி பிடிமண் எடுத்தபோது எடுத்த படம்.

சங்கரன்கோவிலில் கொடியேற்றம்: சித்திரை திருவிழாவுக்கு கோமதி யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி

Published On 2017-04-29 03:42 GMT   |   Update On 2017-04-29 03:42 GMT
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று(சனிக்கிழமை) சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, மாலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக நேற்று காலை சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார், கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் தனித்தனியாக நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News