ஆன்மிகம்

சபரிமலையில் படி பூஜை தொடங்கியது

Published On 2017-01-17 04:16 GMT   |   Update On 2017-01-17 04:16 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று மாலை 7 மணிக்கு படி பூஜை நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக செலவில் நடத்தப்படும் பூஜை, படி பூஜையாகும். இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். 2033-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நாட்களில் இந்த பூஜை நடத்தப்படுவது இல்லை.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று மாலை 7 மணிக்கு படி பூஜை நடந்தது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. சன்னிதானத்தில் 18 படிகளில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, குத்து விளக்கு ஒளியில் இந்த பூஜை நடைபெறுவது சிறப்பு.

படி பூஜை 19- ந் தேதி வரை நடைபெறுகிறது. 20- ந் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் நடை அடைக்கப்படுகிறது.

மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12- ந் தேதி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

Similar News