ஆன்மிகம்

மணப்பாறை நாகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-12-05 05:42 GMT   |   Update On 2016-12-05 05:42 GMT
மணப்பாறை நாகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் உள்ள திருச்சி சாலை அருகே மாதுளாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக வேள்வி வழிபாடு உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை நான்காம் கால வேள்வி வழிபாடு, ரக்‌ஷா பந்தனம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவருக்கு கடவுள் மங்களம் செய்தல், திருமுகம் காட்டல் எனும் பேரொளி வழிபாடு ஆகியவையும் நடைபெற்றன.

மாலை, மூலவர் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்தல், சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவில் ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மணப்பாறை போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Similar News