ஆன்மிகம்

தர்ப்பணம் வேறு சிரார்த்தம் வேறு

Published On 2016-09-29 08:23 GMT   |   Update On 2016-09-29 08:23 GMT
நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் சிரார்த்தம், தர்ப்பணம் என்றால் என்பதை கீழே பார்க்கலாம்.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களை விட உயர்ந்த நாள் மகாளய அமாவாசை. 

மகாளய அமாவாசை மிகவும் தனித்துவம் வாய்ந்த நாள். தலைமுறைக்கே நற்பயன் அளிப்பது மகாளய பட்ச அமாவாசை!
குடும்பத்தில் முன்னோர்களை நினைவு கூர்ந்து - தமிழ் மாதத்தின் நாட்களைக் கணக்கிட்டு ( திதி) செய்வது சிரார்த்தம் எனப்படும். வருடத்தின் அமாவாசை நாட்களில் செய்வது தர்ப்பணம் எனப்படும். 

சிரார்த்தம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு வகைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல்.

ஆனால், தர்ப்பணம் என்பது நதிக்கரைகளில் முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி எள்ளும், நீரும் வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி மகாளய அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்து ஒட்டு மொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். 

தீர்த்தக் கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். 

Similar News