சினிமா செய்திகள்

கமல்ஹாசன்

கமல்ஹாசன் படத்தின் புதிய தகவல்

Published On 2022-07-14 14:11 GMT   |   Update On 2022-07-14 14:11 GMT
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
  • இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் இப்படத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியை படக்குழு தேர்வு செய்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


சுஷின் ஷ்யாம்

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கும்பலங்கி நைட்ஸ், வைரஸ், ட்ரான்ஸ், மின்னல் முரளி உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News