சினிமா செய்திகள்
null

நடிகை கார் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நடிகர் தற்கொலை... அதிர்ச்சியில் தெலுங்கு சின்னத்திரை

Published On 2024-05-18 11:18 IST   |   Update On 2024-05-18 11:26:00 IST
  • நடிகர் சாந்துவும், நடிகை பவித்ராவும் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.

கன்னடம் மற்றும் தெலுங்கு டி.வி. தொடர்களில் பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது காரில் இருந்த பவித்ராவின் சகோதரி, நடிகர் சந்திரகாந்த் என்கிற சாந்து மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பவித்ராவின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடிகர் சாந்து தற்கொலை கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொடரான "திரிநயனி"யில் பவித்ரா ஜெயராமின் கணவராக நடித்த சந்து, மணிகொண்டாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர் சாந்துவும், நடிகை பவித்ராவும் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்துள்ளார். அதே போல் சந்துவுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்கிறார்.

இருவரும் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தங்கள் உறவை முறைப்படுத்த திட்டமிட்டனர், ஆனால் பயணத்திலிருந்து திரும்பி வரும் போது கார் விபத்தில் பவித்ரா இறந்தார்.

ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News