null
கதிர்- திவ்யபாரதி நடிக்கும் "ஆசை" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'இஷ்க்' (Ishq) என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் படம் 'ஆசை'.
மலையாளத்தில் ஷேன் நிகம் மற்றும் ஆன் ஷீட்டல் நடித்த பாத்திரங்களில் தமிழில் கதிர் மற்றும் திவ்யபாரதி நடித்துள்ளனர்.
தமிழில் இப்படத்தை ஜீரோ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஷிவ் மோஹா இயக்குகிறார். இப்படத்தில், லிங்கா, பூர்ணா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.
ரொமாண்டிக் திரில்லரபாக உருவாகி இருக்கும் இப்படம்,'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் மற்றும் 'பேச்சுலர்' புகழ் திவ்யபாரதி ஆகிய இருவருக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆசை படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஆசை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.