கட்டணமில்லா வேலைவாய்ப்பு சேவை..!- வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.
வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.
விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.